ஐரோப்பிய நாடுகளில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு பைஸர்- ஃபயோன்டெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை மூன்றாவது பூஸ்டர் டோஸாக செலுத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திய பின்னர் 6 மாத இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
மூன்றாவது டோஸின் பரிந்துரைக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அதிகரிப்பைக் காட்டும் 18 முதல் 55 வயதுடையோரின் ஆய்வின் தரவை அடிப்படையாகக் கொண்டு இந்த பரிந்துரை பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துகள் முகமையின் மருந்துகள் குழு தெரிவித்துள்ளது.
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு வலுவான பாதுகாப்புடன் ஆன்டிபாடி அளவை இணைக்கும் நேரடி ஆதாரங்கள் இல்லை என்றாலும், கூடுதல் டோஸ் குறைந்தபட்சம் சில நோயாளிகளுக்கு பாதுகாப்பை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஐரோப்பிய மருந்துகள் முகமையின் மருந்துகள் குழு குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவில், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே பூஸ்டர்களை பரிந்துரைத்துள்ளது.
கடுமையான கொவிட் ஆபத்தில் உள்ள மக்கள்; மற்றும் முன்கள பணியாளர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.