நாட்டின் பல பகுதிகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாகாணம் மற்றும் மஹரகம, பன்னிப்பிட்டிய, ரத்மலானை, ஹொரண, தெஹிவளை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் வழங்கல் செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக தென் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் மின் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.