கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 477 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 77 ஆயிரத்து 851 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 21 ஆயிரத்து 218 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 102 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.