இலங்கையில் 20 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது தொடர்பாக ஆரம்பக்கட்ட வைத்திய ஆலோசனை கிடைக்கப் பெற்றுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை வழங்குவது தொடர்பாக ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸை செலுத்துவது தொடர்பில் ஆரம்பக்கட்ட வைத்திய ஆலோசனை மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவ்வாறு பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதாயின் விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோயுடையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அதன் பின்னர் கட்டம் கட்டமாக ஏனையோருக்கு தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவித்தலும் கிடைக்கப்பெறவில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.