இந்தியாவில் கொரோனா தொற்றினால் நேற்று (வெள்ளிக்கிழமை) ஒரேநாளில் 21 ஆயிரத்து 463 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 இலட்சத்து 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 32 இலட்சத்து 17 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
அதேநேரம் 2 இலட்சத்து 46 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மேலும் 277 பேர் நேற்று ஒரேநாளில் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.