இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த மேலும் 421 பேர் குணமடைந்துள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 79 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது.