பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 36ஆயிரத்து 060பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 124பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 80இலட்சத்து 81ஆயிரத்து 300பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 541பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 50ஆயிரத்து 234பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 808பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 65இலட்சத்து 93ஆயிரத்து 525பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.