நாட்டில் கொரோன தொற்று அடையாளம் காணப்படும் நோயாளிகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை அண்மைக்காலமாக சற்று குறைவடைந்து வருகின்றது.
அதன்படி நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 527,735 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை நேற்றுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மேலும் 10,301 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 490,800 ஆக அதிகரித்துள்ளது.
நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டவர்களில் 13,377 பேர் இதுவரை உயிரிழந்துள்ள அதேவேளை கொரோனா தொற்று உறுதியான மேலும் 23,558 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.