பிரித்தானியாவின் பொருளாதாரம் 0.4 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.
அதிகமான மக்கள் உணவருந்தி, விடுமுறைக்கு சென்று இசை விழாக்களில் கலந்து கொண்டதன் பின்னணியில் இந்த வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் அனைத்து கொவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்ட பிறகு முதல் முழு மாதத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு சேவைத்துறை மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது.
கலை, பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு விளையாட்டுக் கழகங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் திருவிழாக்களால் 9 சதவீத வளர்ச்சியடைந்துள்ளது. ஹோட்டல்கள் மற்றும் முகாம்களுக்கு அதிக தேவை இருந்தது.
தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட இப்போது பொருளாதாரம் 0.8 சதவீதி சிறிய வளர்ச்சியை கண்டுள்ளது என்று ஓஎன்எஸ் கூறியது.
ஓஎன்எஸ் நிறுவனத்தின் பொருளாதார புள்ளிவிபர இயக்குனர் டேரன் மோர்கன், ‘பிரித்தானியாவில் கொவிட் கட்டுப்பாடுகள் இல்லாமல் முதல் முழு மாதத்தில் இருந்து மதுபான சாலைகள், உணவகங்கள் மற்றும் திருவிழாக்கள் பயனடைந்ததால் பொருளாதாரம் ஒகஸ்டில் உயர்ந்தது’ என கூறினார்.