உலகளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 49இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொவிட் தொற்றினால் மொத்தமாக 49இலட்சத்து நான்காயிரத்திற்குமு; மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றினால், 24 கோடியே எட்டு இலட்சத்து 23ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 21கோடியே 80இலட்சத்து 76ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பை சந்தித்த முதல் நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
இதற்கு அடுத்தப்படியாக அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நாடுகளாக இந்தியா, பிரேஸில், பிரித்தானியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன.