உக்ரேனில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 60ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உக்ரேனில் இதுவரை கொவிட் தொற்றினால் 60ஆயிரத்து 137பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 19ஆவது நாடாக விளங்கும் உக்ரேனில் இதுவரை 26இலட்சத்து பத்தாயிரத்து 899பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 13ஆயிரத்து 624பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 202பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட இரண்டு இலட்சத்து 34ஆயிரத்து 180பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 177பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 23இலட்சத்து 16ஆயிரத்து 582பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.