பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 44ஆயிரத்து 932பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 145பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், இதுவரை மொத்தமாக 83இலட்சத்து 61ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஒரு இலட்சத்து 38ஆயிரத்து 379பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 13இலட்சத்து 84ஆயிரத்து 143பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 783பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 68இலட்சத்து 39ஆயிரத்து 129பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.