கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 1,353பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 11பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 79ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 493பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 35ஆயிரத்து 384பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 752பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்து 15ஆயிரத்து 992பேர் குணமடைந்துள்ளனர்.