மத்திய டமாஸ்கஸில் இராணுவப் பேருந்து மீது நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டதாக சிரிய அரசாங்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஜிஸ்ர் அல்-ராயிஸ் பாலத்தின் கீழ் சென்றபோது வாகனத்தில் இருந்த இரண்டு வெடிபொருட்கள் வெடித்து சிதறியதாக சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பல வருடங்களாக சிரியாவின் தலைநகரில் நடந்த மிக மோசமான குண்டுவெடிப்பு சம்பவம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மீதுஇ ராணுவம் நடத்திய தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
இந்த கொடூரமான குற்றத்தைச் செய்த பயங்கரவாதிகள் எங்கிருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் முகமது அல்-ரஹ்மான் கூறினார்.
2011 முதல் அதிபர் பஷார் அல்-அசாத்தை வீழ்த்த முயற்சித்து வரும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஜிஹாதிஸ்ட் குழுக்களின் இறுதி கோட்டையாக வடமேற்கு சிரியா உள்ளமை குறிப்பிடத்தக்கது.