நைஜீரியாவின் ஓயோ மாகாணத்தில் உள்ள சிறையில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 800 கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர ஆயதங்களுடன் சிறையை சுற்றிவளைத்து மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகளை கொண்டு சிறைச் சுவர்களை தகர்த்து 800 கைதிகளை மர்ம கும்பல் தப்பிக்க வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தப்பியவர்களில் 262 பேரை மீண்டும் கைது செய்துள்ளதாகவும் ஏறத்தாழ 575 பேரை தேடும் பணி நடந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நடப்பாண்டில் 3ஆவது முறையாக சிறையை தகர்த்து கைதிகள் தப்பிக்கும் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.