கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் தலைமைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிதி கழகத்தின் தலைமைச்செயல் அதிகாரி டேவிட் மார்சிக், உயர்மட்ட தூதுக்குழுவுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியா வருகிறார்.
அவர் இந்தியாவில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை இங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இவர் இந்தியா வரும் நிலையில்,கொரோனா தடுப்பூசி உற்பத்தியில் இந்தியா பெரும் சக்தியாக திகழ்கிறது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
அந்த நாட்டுடன் அமெரிக்காவின் பணி, மக்களின் உயிர்களைக் காப்பாற்றுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2.3 பில்லியன் டொலருக்கும் அதிகமான (சுமார் ரூ.17 ஆயிரத்து 250 கோடி) தங்களது முதலீட்டில் இந்தியா மிக முக்கியமான, மிகப்பெரிய நட்பு நாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.