உலகக்கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்ரேலிய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
நேற்று அபுதாபியில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்ரேலியா அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதற்கமைய முதலில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதனை அடுத்து 119 என்ற வெற்றியிலக்கை நோக்கித் துடுப்பாடிய அவுஸ்ரேலியா அணி 19.4 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக அவுஸ்ரேலியா அணி சார்பாக சிறப்பாக பந்துவீசி 2 விக்கெட்களை எடுத்த ஜோஷ் ஹசில்வுட் தெரிவு செய்யப்பட்டார்.