இந்தியாவில் இதுவரை 102 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 24 மணி நேரத்தில் 77 லட்சத்து 40 ஆயிரம் டோஸ்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளன.
இதன் மூலம் நாடு முழுவதும் இதுவரை 102 கோடியே 10 இலட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
மேலும் பெருந்தொற்றில் இருந்து மீட்கப்பட்டவர்களின் விகிதம் 98 விழுக்காடாக உள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களில் முன்னுரிமையின் அடிப்படையில் இரண்டாவது டோஸை வழக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.