நோர்வேயில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, நோர்வேயில் இரண்டு இலட்சத்து 517பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 91ஆவது நாடாக விளங்கும் நோர்வேயில் இதுவரை 894பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றினால், 424பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால், பாதிக்கப்பட்டுள்ள ஒரு இலட்சத்து பத்தாயிரத்து 671பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 11பேர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 88ஆயிரத்து 952பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.