அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நேற்றுடன் நிறைவடையவிருந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் எதிர்வரும் ஏப்ரல் 28ஆம் திகதி வரை 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது.