தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார்.
ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார்.
தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார்.
புதிய தலிபான் அரசின் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சனிக்கிழமையன்று, இராணுவ வீரர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பேசுவதற்காக அகுந்த்ஸடா தாருல் உலூம் ஹக்கிமா மதரஸாவுக்கு சென்றதாக தலிபான் அலுவலர்கள் தெரிவித்தனர்.
அங்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டடித்துடன் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படாத நிலையில், அங்கு எடுக்கப்பட்ட 10 நிமிட விடியோ தலிபான் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது.
கடந்த 2016ஆம் ஆண்டு, அமெரிக்க நடத்திய ட்ரோன் தாக்குதலில் அப்போது தலைவராக இருந்த முல்லா அக்கர் மன்சூர் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அகுந்த்ஸடா தலைவராக தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.