18 மாதங்களுக்கு பின்னர் முதல் முறையாக இன்று முதல் சர்வதேச எல்லைக் கட்டுப்பாடுகளை அவுஸ்ரேலியாவும் தாய்லாந்தும் தளர்த்தியுள்ளன.
அதன்படி தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்து சீனா மற்றும் அமெரிக்கா உட்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு பச்சை கொடி காட்டப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தனிமைப்படுத்தல் இன்றி வருகைதந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் 21 முதல் சிங்கப்பூர் மக்கள் தனிமைப்படுத்தல் இன்றி பயணம் செய்ய முடியும் என்றும் அவுரேலியா அறிவித்துள்ளது.