வடகொரியா மீதான ஐ.நா.வின் பொருளாதாரத் தடைகளை நீக்க சீனாவும் ரஷ்யாவும் மீண்டும் அழுத்தம் கொடுத்துள்ளன.
வடகொரியாவின் சிலைகள் கடல் உணவுகள் மற்றும் துணி ஏற்றுமதி மீதான தடையை நீக்குவதற்கான 2019ஆம் ஆண்டு முயற்சியை புதுப்பித்து, சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய இறக்குமதி உச்சவரம்பை உயர்த்துவது உள்ளிட்டவற்றை விரிவுபடுத்துவதன் மூலம் வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை தளர்த்துவதற்கு சீனாவும் ரஷ்யாவும் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புக் குழுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
தனிமைப்படுத்தப்பட்ட ஆசிய மாநிலத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் 15 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் அந்தத் தடைகளை நீக்க வேண்டும் என்று சீனாவும் ரஷ்யாவும் விரும்புகின்றன.
வட கொரியர்கள் வெளிநாடுகளில் பணிபுரிவதற்கான தடையை நீக்குதல் மற்றும் கொரிய நாடுகளுக்கிடையேயான இரயில் மற்றும் வீதி ஒத்துழைப்பு திட்டங்களுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிப்பது உட்பட, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா மற்றும் சீனாவால் முன்மொழியப்பட்ட பிற நடவடிக்கைகளும் வரைவுத் தீர்மானத்தில் அடங்கும்.
சீனாவும் ரஷ்யாவும் தங்களின் புதிய வரைவுத் தீர்மானம் குறித்து இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையையும் திட்டமிடவில்லை என்று இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக ஒன்பது வாக்குகள் தேவை.
ரஷ்யா மற்றும் சீனாவின் ஐ.நா தூதரகங்கள் புதிய உரை பற்றிய கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை, இது வெள்ளிக்கிழமை சபை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது என்று தூதர்கள் தெரிவித்தனர்.
2006ஆம் ஆண்டு முதல் வடகொரியா தனது அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்காக வடகொரியா ஐ.நா.வின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.