அசர்பைஜானில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால் மொத்தமாக ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஐந்து இலட்சத்து ஆயிரத்து 508பேர் குணமடைந்துள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 57ஆவது நாடாக விளங்கும் அசர்பைஜானில் ஐந்து இலட்சத்து 39ஆயிரத்து 710பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், இரண்டாயிரத்து 706பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 29பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 31ஆயிரத்து 20பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.