மேல் மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மேலும் ஆயிரத்து 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 468 பேர் நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் என்பதுடன், 393 சந்தேகநபர்கள் ஏனைய குற்றச் செயல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.