மறைந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த பத்ம விருது வழங்கும் நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) டெல்லியில் நடைபெற்றது.
இதன்போது மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் குறித்த விருதினைப் பெற்றுக்கொண்டனர்.
அதேநேரம் தமிழகத்தை சேர்த்த சமூக சேவகர் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், புதுச்சேரியைச் சேர்ந்த இலக்கியவாதி மனோஜ் தாஸ் ஆகியோரும் விருதுகளை பெற்றுக்கொண்டனர்.
இதேபோன்று திரைப்படத்துறையில் பின்னணி பாடகி பாம்பே ஜெயஸ்ரீ, பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட பலரும் விருதுகளை பெற்றுள்ளனர்.