நாட்டில் இதுவரையில், 56 ஆயிரத்து 252 பேருக்கு தடுப்பூசியின் மூன்றாவது டோஸான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம், நாட்டில் நேற்றைய தினம் மாத்திரம் 6 ஆயிரத்து 721 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
அதில் 2 ஆயிரத்து 191 ஃபைசர் தடுப்பூசிகள் மூன்றாவது டோஸாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.