ஆளும் கட்சி மாத்திரமன்றி, எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமரிடம் இரண்டு கேள்விகள் விகிதம் கேட்டு, அவரிடமிருந்து பதிலை பெற்றுக்கொள்வதற்கு நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) முதல் சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.
அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் உரிய வகையில் முன்னெடுக்கப்படாததை அடுத்தே, பிரதமரிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பம் இல்லாது போயிருந்தது.
இந்த நிலையில், இந்த சந்தர்ப்பத்தினை இன்று முதல் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.