கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 272 பேர் குணமடைந்து இன்று (வியாழக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 22 ஆயிரத்து 789 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 47 ஆயிரத்து 346 ஆக பதிவாகியுள்ளது..
மேலும் கொரோனா தொற்றினால் நாட்டில் இதுவரையில் 13 ஆயிரத்து 908 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.