சுவீடனில் நடைபெற்று வரும் ஸ்டாக்ஹோம் பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளார்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ், பிரான்ஸின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கை எதிர்கொண்டார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில், முதல் செட்டை ஆர்தர் ரிண்டர்க்னெக் 6-4 என கைப்பற்றினார்.
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில், சிறப்பாக விளையாடிய டெனிஸ் ஷபோவலோவ், செட்டை 3-6 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டைக் கைப்பற்றியதால், வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவது செட்டில் இருவரும் சிறப்பாக விளையாடினர்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதி செட்டில், 7-5 என செட்டை வென்று டெனிஸ் ஷபோவலோவ், வெற்றிபெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.