ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை பேணிய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (TID) காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஈஸ்டர் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிமுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி வந்த காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய கே.ஜி.பி. ஜவ்ராஸ் என்ற சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, அவரிடம் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.