கொரோனா கொத்தணிகள் உருவாகும் எச்சரிக்கை தன்மை கொண்ட பிரதேசங்களில் விரைவாக மூன்றாம் கட்ட தடுப்பூசி பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியா் நிபுணர் அசேல குணவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
20 வயதுக்கும் மேற்பட்ட ஏனைய நோய் தாக்கத்துக்கு உள்ளானவர்களுக்காக மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.