ஜோர்ஜியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜோர்ஜியாவில் மொத்தமாக எட்டு இலட்சத்து 293பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 47ஆவது நாடாக விளங்கும் ஜோர்ஜியாவில் இதுவரை 11ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நான்காயிரத்து 446பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 77பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 51ஆயிரத்து 688பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மொத்தமாக, ஏழு இலட்சத்து 37ஆயிரத்து 316பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.