இந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது.
உயிர் பிழைத்த 15பேர், மீனவர்களால் மீட்கப்பட்டு வடமேற்கு லிபியாவில் உள்ள ஜுவாரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இத்தாலிய கடலோர காவல்படை மத்தியதரைக் கடலில் சிரமப்பட்ட படகுகளில் இருந்து டஸன் கணக்கான சிறார்கள் உட்பட 420க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டது.
சிசிலிக்கு தெற்கே உள்ள சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு 70பேர் தங்கள் மோட்டார் படகுகள் மூலம் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்டதாக கடலோர காவல்படை அறிக்கை தெரிவித்துள்ளது.