மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகேவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இதேவேளை, இவ்வாரம் அவர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் பங்கேற்றிருந்தார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.