கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான முதல் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மாத்திரையான மோல்னுபிராவிரை (Molnupiravir) இறக்குமதி செய்ய தனியார் துறையின் ஆர்வத்தை வெளிப்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
பிரித்தானியாவின் மெர்க் நிறுவனம் உட்பட பல நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா வைரஸுக்கு எதிரான மோல்னுபிராவிர் மருந்தை இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை கொரோனா தொழில்நுட்பக் குழு நவம்பர் 15ஆம் திகதி வழங்கியது.
இந்த நிலையில், கொரோனா நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக சில தனியார் நிறுவனங்கள் அந்த மாத்திரையை இறக்குமதி செய்வதற்கு ஏற்கனவே விருப்பம் தெரிவித்துள்ளதாக மருந்துப் பொருட்கள் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்த நிறுவனங்களை அவற்றின் விலைகளைக் குறிப்பிடும்படி தாங்கள் அழைப்பு விடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் அவர்கள் தயாரிப்பாளருடன் தங்கள் இணைப்பை ஆவண ஆதாரம் மூலம் நிறுவ வேண்டும் என்றும் அது முடிந்ததும் இந்த விடயத்தை மருந்து மதிப்பீட்டுக் குழுவின் அனுமதிக்கு அனுப்பிய பின்னர், இறக்குமதிக்கு அனுமதி வழங்க முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.