கொரோனா வைரஸுற்கெதிரான தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் செலுத்தியவர்கள் முறையான விசா வைத்திருந்தால், விலக்கு கேட்டு விண்ணப்பிக்காமல் அவுஸ்ரேலியாவிற்கும் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் தடையின்றி வரலாம் என பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தொழிலாளர்கள், மாணவர்கள், மனிதநேயத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், விடுமுறைக்கு வருபவர்கள், குடும்ப விசா வைத்திருப்பவர்கள் தகுதியான விசா வைத்திருந்தால் தடையின்றி வரலாம்.
தகுதியான விசா வைத்திருக்கும் மாணவர்கள், தொழிலாளர்கள், மனிதநேய ஆர்வலர்கள், விடுமுறைக்கு வரும் பயணிகள், குடும்பத்துடன் வருவோர் அனைவரும் தகுதியான விசா வைத்திருத்தல் போதுமானது.
அவுஸ்ரேலிய மருந்து நிர்வாக அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாகச் செலுத்தியிருக்க வேண்டும். விசாவுக்கு விண்ணப்பிக்கும்போது தடுப்பூசி சான்றிதழ், பயணத்துக்கு 3 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்ட கொவிட் பரிசோதனையில் கொவிட் எதிர்மறை சான்று ஆகியவற்றை வழங்க வேண்டும்.
தொழிலாளர்கள், வெளிநாட்டு மாணவர்கள் ஆகியோர் நாட்டின் பொருளாதாரம் மேம்படுவதற்கு உதவி செய்யக்கூடியவர்கள், எங்கள் கல்வித்துறைக்கு ஆதரவு வழங்கக்கூடியவர்கள்’ என கூறினார்.