சுகாதாரத்துறை தொழில் வல்லுனர்கள் சம்மேளனத்தின் சுகாதார சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சம்பளம் மற்றும் கொடுப்பனவு உள்ளிட்ட சில பிரச்சினைகளை முன்வைத்து அவர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
அதன்படி, இன்று (புதன்கிழமை) காலை 7 மணி முதல் இரண்டு நாட்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
தாதியர், இடைநிலை, நிறைவுகாண் சுகாதார மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் இந்தப் பணிப்புறக்கணிப்பில் பங்கேற்கவுள்ளன.
மேலும் சுகாதார சேவையாளர்களின் போராட்டம் காரணமாக இன்று முதல் கொரோனா தொற்றாளர்களுக்கு பீசிஆர் மற்றும் ரெபிட் என்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.