• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

காலி டெஸ்ட்: மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி இலங்கை அணி சிறப்பான வெற்றி!

Anoj by Anoj
2021/11/25
in கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
80 1
A A
0
51
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி 187 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 1-0 என்ற கணக்கில் இலங்கை அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

காலி மைதானத்தில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 147 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், ரொஸ்டன் சேஸ் 5 விக்கெட்டுகளையும் வோரிக்கான் 3 விக்கெட்டுகளையும் கெப்ரியல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, 230 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மேயர்ஸ் 45 ஓட்டங்களையும் பிரத்வெயிட் 41 ஓட்டங்களையும் கோர்ன்வோல் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பிரவீன் ஜெயவிக்கிரம 4 விக்கெட்டுகளையும் ரமேஸ் மெண்டிஸ் 3 விக்கெட்டுகளையும் லக்மால், எம்புல்தெனிய மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

156 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 194 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய மேற்கிந்திய தீவுகள் அணி, இலங்கை கிரிக்கெட் அணி, 348 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது இலங்கை அணி சார்பில் அதிகபட்ச ஓட்டங்களாக, திமுத் கருணாரத்ன 83 ஓட்டங்களையும் அஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காது 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், கோர்ன் வோல் மற்றும் வோரிக்கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 349 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக Nkrumah Bonner ஆட்டமிழப்பின்றி 68 ஓட்டங்களையும், Joshua Da Silva 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், லசித் எம்புல்தெனிய 5 விக்கட்டுக்களையும், ரமேஷ் மென்டிஸ் 4 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 147 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்ட அணித்தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 29ஆம் திகதி காலி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Related

Tags: இலங்கை அணிதிமுத் கருணாரத்னமுதலாவது டெஸ்ட் போட்டிமேற்கிந்திய தீவுகள் அணி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானம்!

Next Post

மன்னார் மாவட்டதில் தொடரும் சீரற்ற காலநிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

Related Posts

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

2026-03-17
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!
உலகம்

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

2026-03-17
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!
உலகம்

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

2026-03-17
மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

2026-03-17
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து  வௌியேறினார் கோட்டா!
இலங்கை

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் வாக்குமூலம்

2026-03-17
இரவு நேரத் தொழில் பயிற்சிக் கூடங்களை நிறுவத் திட்டம் – அநுர குமார
இலங்கை

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

2026-03-17
Next Post
மன்னார் மாவட்டதில் தொடரும் சீரற்ற காலநிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

மன்னார் மாவட்டதில் தொடரும் சீரற்ற காலநிலை- பல குடும்பங்கள் பாதிப்பு!

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் – அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

சேற்றை கிளறினால் துர்நாற்றமே வெளியில் வரும் - அரசாங்கத்தில் உள்ளவர்களை எச்சரித்தார் தயாசிறி

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு!

0
கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

கியூபெக் வரவு செலவுத் திட்டம்: தேர்தலுக்கு முந்தைய ‘நிதானமான’ நிதிநிலை அறிக்கை!

0
மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

மத்திய கிழக்கு யுத்தம்: உணவுப் பஞ்சம் எனும் அடுத்த போர்க்களம்!

0
மட்டுவில் 8 பேர் கைது

மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: 134 வெளிநாட்டவர்கள் கைது

0
பிரான்ஸை உலுக்கும் தேர்தல் முடிவுகள்

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.