கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேறமாட்டார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ ஹரிசன் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு மத்தியில் பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கருத்து நிலவிவருவதாக கூறினார்.
சுதந்திரக் கட்சி தற்போதைய அரசாங்கத்தின் கைக்கூலியாக செயல்படுகிறது என கூறினாலும் அக்கட்சியின் உறுப்பினர்கள் ஒருபோதும் அரசாங்கத்தை விட்டு வெளியேற மாட்டார்கள் என தெரிவித்தார்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்களும் நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று வழியை நாட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீ ஹரிசன் குறிப்பிட்டார்.