காலி – நெலுவ பகுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உகண்டாவில் பணியாற்றி மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பிய ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கடந்த 27ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் கடந்த 2012ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டது என்பதுக் குறிப்பிடத்தக்கது.