• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்று தொடரை வென்றது!

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றிபெற்று தொடரை வென்றது!

Anoj by Anoj
2021/12/06
in கிரிக்கெட், விளையாட்டு
72 0
A A
0
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 372 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில், இந்தியக் கிரிக்கெட் அணி கைப்பற்றியுள்ளது.

இந்த வெற்றியானது, இந்தியக் கிரிக்கெட் டெஸ்ட் வரலாற்றில், இந்திய அணி பதிவு செய்த மிகப்பெரிய ஓட்ட வெற்றியாகும்.

மும்பை மைதானத்தில் கடந்த 3ஆம் திகதி ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியக் கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 325 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 150 ஓட்டங்களையும் அக்ஸர் பட்டேல் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று சாதனைப் படைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என பெருமையை அவர் பெற்றார்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய நியூஸிலாந்து அணி, 62 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, கெய்ல் ஜேமிஸன் 17 ஓட்டங்களையும் டொம் லதம் 10 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் சிராஜ் 3 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் ஜெயந் யாதவ் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 263 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்தியா அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 276 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதற்கமைய இந்தியக் கிரிக்கெட் அணி, நியூஸிலாந்து அணிக்கு 540 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மாயங் அகர்வால் 62 ஓட்டங்களையும் புஜாரா மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தலா 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஜாஸ் பட்டேல் 4 விக்கெட்டுகளையும் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 540 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய நியூஸிலாந்து அணி, 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் இந்தியா அணி, 372 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, டேரில் மிட்செல் 60 ஓட்டங்களையும் ஹென்ரி நிக்கோல்ஸ் 44 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், அஸ்வின் மற்றும் ஜெயந் யாதவ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும் அக்ஸர் பட்டேல் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, மாயங் அகர்வால் தெரிவுசெய்யப்பட்டார். அதேபோல அஸ்வின் தொடரின் நாயகனாக தெரிவுசெய்யப்பட்டார்.

Related

Tags: அஸ்வின்இந்தியக் கிரிக்கெட் அணிநியூஸிலாந்து அணிமாயங் அகர்வால்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

Update- முல்லைத்தீவு கடலில் நீராடச் சென்று காணாமல்போயிருந்த ஏனைய இருவரும் சடலங்களாக கண்டெடுப்பு

Next Post

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

Related Posts

லங்கா பிரீமியர் லீக்கிற்கான புதிய திகதி அறிவிப்பு!
கிரிக்கெட்

2026 LPL தொடர்பான அப்டேட்!

2026-04-22
அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!
ஆசிரியர் தெரிவு

அபிஷேக் ஷர்மாவின் சதத்தால் டெல்லியை 47 ஓட்டத்தால் வீழ்த்திய ஹைதராபாத் அணி!

2026-04-22
தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!
கிரிக்கெட்

தசூன் ஷானக்கவுக்கு ஓராண்டு தடை!

2026-04-21
இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!
டெனிஸ்

இந்தியா பயணிக்கும் திட்டத்தை வெளிப்படுத்தினார் நோவாக் ஜோகோவிச்!

2026-04-21
குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!
ஆசிரியர் தெரிவு

குஜராத்தை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி!

2026-04-21
முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!
ஆசிரியர் தெரிவு

முல்லன்பூரில் சிக்ஸர் மழை; 54 ஓட்டத்தால் லக்னோவை வீழ்த்திய பஞ்சாப்!

2026-04-20
Next Post
நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்

முன்னாள் நிதி அமைச்சர் ரவி உட்பட எண்மருக்கும் தொற்றில்லை!!

மத்திய வங்கி மோசடி: 11 குற்றச்சாட்டுகளில் இருந்து முன்னாள் அமைச்சர் விடுதலை

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

விளாடிமிர் புதின் இந்தியா வருகை!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

காவத்தை அராஜகம்: கறுப்பு ஆடை கும்பலுக்கு எதிராகப் பிரதி அமைச்சர் பிரதீப் அதிரடி!

0
நாட்டில் தேரர்களுக்கு மட்டும் தனிச் சட்டமா? – மனோ கணேசன்!

நீலகாமம் தோட்டத்தில் அராஜகம்: “அனுர ஆட்சியிலும் ஹெல்மட் குண்டர்களின் இனவாதமா?” – மனோ கணேசன்  கேள்வி!

0
எதிர்காலத்தில் உறுதியாக கவனம் செலுத்தி, நமது வரலாற்றைப் பற்றி சிந்திப்போம் – சுதந்திர தினச் செய்தியில் சஜித்!

வெளிநாட்டிற்குச் செலுத்த வேண்டிய பெருந்தொகை கடன் – தனிநபரின் வங்கி கணக்கிற்கு எவ்வாறு சென்றது – சஜித் கேள்வி!

0
நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

நிலக்கரி இறக்குமதி விவகாரம் குறித்த ஆணைக்குழுவின் விசாரணை ஆரம்பம்!

0
சுரேஷ் சலேவை தொடர்ந்தும் தடுப்புக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.