நாகலாந்தில் பொதுமக்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்திய விவகாரத்தை தொடர்ந்து ஆயுத படைகளின் சிறப்பு அதிகார சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நாகலாந்து அரசு மத்திய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் வடக்கு கிழக்கு மாநிலங்களில் பிரச்சினைக்குரிய பகுதிகள் என பட்டியலிடப்பட்டவைகளில் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகார சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனை பயன்படுத்தி சட்டம், ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவோரை பிடியாணை இன்றி கைது செய்யவும், அனுமதியின்றி சோதனை செய்யவும் முடியும். அதேநேரம் இந்த சட்டத்தின் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தும் அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது நாகலாந்தில் பொதுமக்கள் 14 பேர் இந்த சட்டத்தை பயன்படுத்தியே கொலை செய்யப்பட்டிருந்தனர். ஆகவே இந்த சட்டத்தை நீக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.