சுவீடிஷ் கடற்கரையில் பால்டிக் கடலில் டென்மார்க் படகுடன் பிரித்தானியா சரக்குக் கப்பல் மோதியதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரித்தானிய கொடியிடப்பட்ட ஸ்காட் கேரியர் கப்பலில் இருந்தவர்களின் அலட்சியம் மற்றும் குடிபோதை காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளது.
ஸ்காட் கேரியரில் இருந்த இரண்டு பணியாளர்கள் வரம்பிற்கு மேல் குடிபோதையில் இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விபத்து தொடர்பாக, பிரித்தானியா மற்றும் குரோஷிய பிரஜை ஒருவரும் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டென்மார்க்கின் கவிழ்ந்த கரின் ஹோஜ் என்ற கப்பலில் ஒருவரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) உள்ளூர் நேரப்படி சுமார் 03:30 மணிக்கு, தெற்கு சுவீடிஷ் கடற்கரை நகரமான யஸ்டாட் மற்றும் டேனிஷ் தீவான போர்ன்ஹோல்ம் இடையே இந்த விபத்து ஏற்பட்டது.