தமிழகம் முழுவதும் இன்று (சனிக்கிழமை) 15ஆவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
செப்டம்பர் மாதத்தில் இருந்து, மெகா தடுப்பூசி முகாமை தமிழக அரசு நடத்தி வருகிறது. அதன்மூலம் நாள் ஒன்றுக்கு 10 இலட்சத்துக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
100 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி என்ற இலக்கை எட்டுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது வரை 14 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.
இந்நிலையில், 15-வது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் இன்று நடைபெறுகிறது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த தடுப்பூசி முகாமில் காலக்கெடு முடிந்தும் 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அந்தவகையில் இதுவரை தமிழகத்தில் 1 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசியும் 93 இலட்சம் பேர் காலக்கெடு முடிந்து 2ஆவது தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொள்ளாமல் உள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.