பண்டிகைக்காலத்திற்கு பின்னரான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற எச்சரிக்கையினை பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர்.
குறிப்பாக எதிர்வரும் 25ஆம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சில சுகாதார நடைமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கமும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில் பண்டிகை காலத்தில் மக்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும், அவ்வாறு நடந்து கொண்டால் மாத்திரமே நாடு எதிர்காலத்தில் முடக்கப்படாது எனவும் சுகாதார தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை, இலங்கையில் இதுவரை நான்கு ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.