இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் ஆயிரத்து 75 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 3 கோடியே 47 இலட்சத்து 47 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 41 இலட்சத்து 87 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இவர்களில் 83 ஆயிரத்து 342 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.