உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் லங்கா ஐஓசி நிறுவனமும் விலையை அதிகரித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றரொன்றின் விலை 177 ரூபாயாக அதிகரித்துள்ளது. முன்னர் இதன் விலை 157 ரூபாயாக இருந்த நிலையில் 20 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறே 95 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் விலை 26 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 210 ரூபாயாகும்.
புதிய விலை உயர்வால் 10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு, ஒரு லீற்றர் ஒட்டோ டீசல் 111 ரூபாயிலிருந்து 121 ரூபாயாக உயர்ந்துள்ளது.
சுப்பர் டீசல் லீற்றர் 15 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 144 ரூபாயாக இருந்த இதன் விலை159 ரூபாயாக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 77 ரூபாயாக இருந்த மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 87 ரூபாயாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.