விருந்தோம்பல் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனங்கள் வரும் நாட்களில் இங்கிலாந்தில் மேலும் கொவிட் கட்டுப்பாடுகள் இருக்குமா என்பது குறித்து அரசாங்கத்திடம் இருந்து தெளிவான முடிவை எடுக்க அழைப்பு விடுக்கின்றன.
பிரதமர் பொரிஸ் ஜோன்சன், நேற்று (திங்கட்கிழமை) புதிய நடவடிக்கைகள் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால் தரவுகளின் அடிப்படையில் மதிப்பாய்வு செய்யப்படுமென கூறினார்.
நேற்று மாலை நிதி உதவியை விரும்பும் வணிகத் தலைவர்களை திறைசேரியின் தலைவர் சந்தித்தார் என்று அமைச்சர் ஸ்டீபன் பார்க்லே கூறினார்
இந்த விவாதங்கள் குறித்து அரசாங்கம் பின்னர் மேலும் கூறலாம் என்று கூறிய அவர், எச்சரிக்கையுடன் கிறிஸ்மஸ் கொண்டாட மக்களை வலியுறுத்தினார்.
இதற்கிடையில், கொவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 10 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சுகாதார செயலாளர் விரும்புகிறார்.