கொரோனா வைரஸ் (கொவிட்-19) கட்டுப்பாட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சீனாவின் ஷியான் நகரில் மக்கள் வீட்டிற்குள் இருக்கும்படி அரசாங்கம் ஆணையிட்டுள்ளது. இதனால், 1.3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள அந்நகரில் இதுவரை 143 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகளின்படி வீட்டிற்கு ஒருவர், இருநாட்களுக்கு ஒருமுறை தேவையான பொருட்களை வாங்க வெளியில் வரலாம்.
இதனிடையே வியாட்நாம் நாட்டை ஒட்டி அமைந்துள்ள சீனாவின் டாங்ஜிங் நகரம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்தளங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் மூடப்பட்டன. பாடசாலைகளுக்கு சிறுவர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சீன தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனா அடுத்த வருடம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவிருப்பதால் கொரோனா குறித்த அதிக விழிப்புடன் உள்ளது.